வழுக்கை - தள்ளிப் போட சில வழிகள்!
வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்... இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள்.
நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது.
வழுக்கை விழுவதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப் போடலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும்.
ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது.
பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
முடி வளர்வதற்கான சத்துகள் கிடைக்க, அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால் உட்கொள்ள வேண்டும்.
பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான சத்துகள் கிடைக்கும்.
வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. | தகவல்கள்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்