தலைமுடி உதிர்வு - காரணமும் தீர்வும்

இளம் வயதிலேயே முடி உதிர்வதற்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். அதைச் சரிப்படுத்தினால் முடி உதிர்வது நின்றுவிடும். முடி உதிர்வதற்கான காரணங்கள் இதோ...

முடி வளர புரதம், இரும்புச் சத்து, தாமிரம், துத்தநாகச் சத்து, அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின்-சி சத்துகள் தேவை. இல்லையெனில் முடி உதிரும்.

ஈஸ்ட்ரோஜன், தைராக்சின் போன்ற ஹார்மோன்களின் குறைபாடுகளால் தலைமுடி உதிர்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைமுடி உதிரும்.  

டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை நோய் போன்றவை பாதித்திருந்தால் தலைமுடி உதிரலாம். முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு முக்கியக் காரணம்தான்.  

குளித்து ஈரம் காயும் முன் தலைவாருதல், கடினமான சீப்பு, ஹேர் டிரையரை அதிகம் பயன்படுத்துதல், முடியை இறுக்கமாக கட்டுதல் முடி உதிர்வதை ஊக்குவிக்கும்.

தலைமுடியில் வேர்க்கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, சிகிச்சை மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.  

பேரீச்சை, முட்டை, பால் அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளரும் சாத்தியம் கூடும். பணிச் சூழலில் மன அழுத்தம் தவிர்க்கப் பாருங்கள். இது முக்கியம்.  

நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் கால் மணி நேரமாவது வெயிலுக்குச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் படுங்கள்.

அதிக குளோரின் கலந்த தண்ணீரிலோ உப்பு நீரிலோ குளித்தால், முடி உதிரலாம். மென்மையான தண்ணீரில் குளித்தால் நல்லது. | தொகுப்பு: மருத்துவர் கு.கணேசன்  

Web Stories

மேலும் படிக்க...