குறட்டை - சில தடுப்பு வழிகள்
சளியுடன் மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு / டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு முதலான காரணிகளால் குறட்டை ஏற்படலாம்.
தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகளும் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு.
புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவது உண்டு.
குறட்டை ஏற்படுவதை தடுக்கும் சில வழிகளுள் ஒன்று: தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மல்லாக்கப் படுக்க வேண்டாம்; ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும். இதனால், குறட்டை ஏற்படாமல் தடுக்க இயலும்.
குறட்டை பிரச்சினை ஏற்படாமல் இருக்க, எப்போதும் நம் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், தவறாமல் அதற்குரிய மருந்துகளை மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் சாப்பிட வேண்டும். | தகவல்கள்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்.