முதல் காதல் எது? - பெர்னார்ட் ஷாவின் 9 மேற்கோள்கள்!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உதிர்த்த 9 மேற்கோள்கள்...

“வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவது அல்ல; வாழ்க்கை என்பது உங்களை உருவாக்கிக் கொள்வது.”

“மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.”

“தவறான அறிவு என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள்; ஏனென்றால் அது அறியாமையை விட மிகவும் ஆபத்தானது.”

“எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையைவிட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளதும், கண்ணியமானதும் கூட.”

“ஒருபோதும் தவறே செய்யாத நிலையைக் கொண்டிருப்பது வெற்றி ஆகாது; ஒருமுறை செய்த தவறை இரண்டாவது முறையாக செய்யாமலிருப்பதே வெற்றி.”

“இவ்வுலகத்தில் இருந்து தான் பெற்றதைவிட அதிகமாக யார் இந்த உலகத்துக்கு திருப்பிக் கொடுக்கின்றார்களோ, அவர்களே பண்புள்ள மனிதர்களாவர்.”

“மனிதன் புலியை கொல்ல விரும்புவதை விளையாட்டு என்கிறான், அதுவே அந்த புலி அவனை கொல்ல விரும்புவதை கொடூரமானது என்கிறான்.”

“நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பெறுவதில்      இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.”

“சிறிய முட்டாள்தனம் மற்றும் நிறைய ஆர்வம் ஆகியவற்றை மட்டும் கொண்டதே முதல் காதல்.”

Web Stories

மேலும் படிக்க...