தினமும் காலை 15 நிமிடம்... மனநலன் மீட்க!

காலையில் தினமும் 15 நிமிடங்கள், நம்முடைய புறச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்த்து, மனநல மேம்பாட்டுக்கு என ஒதுக்க வேண்டும்.

இந்த 15 நிமிடங்களில், மனத்துக்குள் நாம் நிரப்பும் எண்ணங்களே, அன்றைய நாளை எதிர்கொள்வதற்கான அமைதியான மனநிலையை நமக்கு அளிக்கும்.  

மூச்சை ஆழமாக இழுத்து விட்டபடியே காபியை மெதுவாக ரசித்து அருந்துவது, பயணங்களில் செய்திகளைக் கேட்பதற்குப் பதிலாக இனிமையான இசையைக் கேட்பது அதற்கு உதவும்.

முயற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அதனால் ஏற்படும் மாற்றங்களை / முன்னேற்றங்களைக் கவனிப்பது. 

மன அழுத்தம் நம் அன்றாட வாழ்வின் தரத்தைப் பாதித்து, நம்முள் துளிர்க்கும் நேர்மறை எண்ணங்களை முளையிலேயே பொசுங்கச் செய்துவிடுகிறது.   

மனநலச் சுகாதார மீட்டமைப்புக்கு உதவும் முதல் படி, புதிய செயல்களில் ஈடுபடுவது. இதுமனத்தின் சலிப்பையும் அலுப்பையும் அகற்றும். மனத்துக்கு உற்சாகம் அளிக்கும்.  

மனநலச் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது என்பது, கண்ணாடியைச் சுத்தம் செய்து அதில் நம்மைப் பார்ப்பது போன்றது. சுத்தமான கண்ணாடியே, நம்முடைய முழுமையான அழகை நமக்குக் காட்டும்.   

ஆரோக்கியமற்ற மனம், நமக்குள் இருக்கும் கோபம், ஆதங்கம், பயம், பதற்றம் போன்ற இயல்புகளை நமக்குக் காட்டும். அவையே நமது இயல்புகள் என நம்பச் செய்யும். 

மன மீட்டமைப்புக்கு என நாம் தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கும்போது, நாம் அடிப்படையில் மகிழ்ச்சியாக இருப்பதை உணரப் பழகுகிறோம்.  

மனத்துக்கு எனத் தினமும் நாம் ஒதுக்கும் 15 நிமிடங்கள் முதலில் சிரமமானதாகத் தோன்றினாலும், நாளடைவில் அது எளிதானதாக மாறிவிடும். | தொகுப்பு: முகமது ஹுசைன்  

Web Stories

மேலும் படிக்க...