உளவியல் நிபுணருக்கு மனநல பாதிப்பு வருமா?

பொது மருத்துவர் ஒருவர் தனது நோயாளிகளைப் போல தானும் பாதிப்புக்குள்ளாவது சாதாரணமானது. மருத்துவராக இருந்தாலும் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

உளவியலாளர் ஒருவர் மனநல பாதிப்புக்கு உள்ளாகும்போது அவர் என்ன செய்வார்? - இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதில், 'அவர் மவுனமாக இருந்து விடுவார்' என்பதே!  

உளவியலாளர் ஒருவர் தனது மனநல பாதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசும்போது, அவரது பணி எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதே அவரது மவுனத்துக்கு காரணம்.

உளவியளார்கள் சொந்த மனநல பாதிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசுவது, மற்றவர்கள் பயன் பெறவும் உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

உளவியலாளர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, உளவியலாளர்களும் மனிதர்கள்தான்; அவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஆய்வுகள்.

80%-க்கும் அதிகமானோர் தங்களுக்கு மனநல பாதிப்புகள் இருந்ததாகவும், 48% பேர் தங்களுக்கு மனநல பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் உளவியல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

உளவியலாளர்கள் தங்களின் மனநல பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுவதன் மூலம் நிச்சயம் பிற உளவியலாளர்கள் பயனடைவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Web Stories

மேலும் படிக்க...