மலச்சிக்கலை தவிர்க்க 13 முக்கிய குறிப்புகள்!

சரியான உணவு முறை, தேவையான தண்ணீர் குடித்தல், தினமும் உடற்பயிற்சி... இவைதான் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை. 

மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றுதல் மிக மிக அவசியம். 

தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகி விட்டால், மலச்சிக்கல் வாய்ப்பு 90% குறைந்துவிடும்.

உண்ணும் உணவில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழு தானிய வகைகள் (தவிடு நீக்கப்படாதவை)  அவசியம். 

வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள் நல்லது.

பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை, கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். 

மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாயிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்களுக்கு பதிலாக இளநீர், பழச்சாறுகள் குடிப்பது நல்லது. 

இனிப்பு வகைகளையும், கொழுப்பு உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகள் கூடாது. 

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையின்றி அலையக் கூடாது. 

இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அடக்காதீர்கள். காலை, மாலையோ, தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்வது நல்லது.

மலம் கழிக்க போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. | தகவல்கள்:  பொதுநல மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...