காகம் - சில வியத்தகு தகவல்கள்!

காகங்கள் புத்திசாலிகள். கதைகள் மூலமாகவோ அனுபவங்கள் மூலமாகவோ இதை நீங்களும் அறிந்திருக்கலாம். அதன் குணாதிசயங்களைப் பார்க்கலாம்...

நாம் பார்க்கும் காக்கை வகைக்கு இந்திய வீட்டுக் காகம் (Indian House Crow - Corvus splendens) என்று பெயர். இவை Corvidae (காக்கை) விலங்கியல் குடும்பத்தைச் சேர்ந்தவை.

காக்கைக் குடும்பம்தான் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியாகக் கருதப்படுகிறது. அவற்றின் அறிவுத்திறன் குறித்து ஆய்வு நடத்த உலகில் பல ஆராய்ச்சிக் கூடங்கள் இருக்கின்றன.

சுய அடையாளம் காணும் ஆற்றலை காகங்கள் பெற்றுள்ளன. இது ஒரு வகை சிறப்பு அறிவாற்றல். இந்த ஆற்றல் மனிதர்களுக்குச் சிறு வயதில் இருந்தே காணப்படுகின்றது.

உயர்ந்த அறிவாற்றல் தேவைப்படும் செயல்களுள் ஒன்று Food Caching அதாவது உணவைச் சேமித்து, ஓரிடத்தில் பத்திரமாக வைத்தல். இது காகங்களிடம் அதிகம் இருக்கிறது.

விலங்கினங்களிலேயே வாலில்லாக் குரங்குகளைத் தவிர காகங்கள் மட்டுமே சிறு பொருள்களைக் கொண்டு கருவிகளை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.  

நாம் சிறு வயதில் கேட்டு வியந்த, காகமொன்று பானையின் உள்ளே கற்களைப் போட்டு தண்ணீர் குடித்த கதையின் பின்னால் உள்ள அறிவியலும் இதுவே!

பல புத்திசாலித்தனமான அறிவாற்றல்களைப் பெற்றிருக்கும் காகங்களை ‘சிறகுள்ள வாலில்லாக் குரங்கினம்' என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.  | தொகுப்பு: ரோகிணி முருகன்

Web Stories

மேலும் படிக்க...