மார்க் டுவெய்னின் மகத்தான 10 மேற்கோள்கள்!
அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர் மற்றும் சிறந்த நகைச்சுவையாளரான மார்க் டுவெய்ன் உதிர்த்த அட்டகாசமான 9 மேற்கோள்கள்...
“மனித இனத்திடம் உள்ள ஓர் உண்மையான பயனுள்ள ஆயுதம்... சிரிப்பு!”
“வாழ்வில் வெற்றி பெற, நமக்கு இரண்டு விஷயங்கள் தேவை: ஒன்று அறியாமை, மற்றொன்று நம்பிக்கை.”
“ஒரு செயலில் மேல்நோக்கி செல்வதற்கான ரகசியம், முதலில் அதைச் செய்ய தொடங்குவதுதான்.”
“நாளை மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதை, நாளை வரை தள்ளி வைக்காதீர்கள்.”
“உங்கள் கற்பனையின் கவனம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, நீங்கள் உங்கள் கண்களை நம்பியிருக்க முடியாது.”
“வயது, ஒரு மனம் சார்ந்த பிரச்சினை. நீங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், அது ஒரு பெரிய விஷயமே இல்லை.”
“நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் ஆழ்ந்த மனசாட்சி... இதுவே சிறந்த வாழ்க்கை.”
“உண்மையை மட்டுமே பேசினால், வேறு எதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.”
“நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி... மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே.”