ஆஸ்கார் வைல்டு உதிர்த்த 9 மேற்கோள்கள்!
நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்ற ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்டு உதிர்த்த 9 வாழ்வியல் மேற்கோள்கள் இவை...
“வாழ்க்கையில் இரண்டே துயரங்கள்தான். ஒன்று, ஒருவருக்கு தேவைப்படுவது கிடைப்பது இல்லை. மற்றொன்று, ஒருவருக்கு தேவையில்லாதது கிடைக்கின்றது.”
“எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவுக்கு பணக்காரனாக இல்லை.”
“நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம். ஆனால், நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.”
“வெற்றி என்பது ஒரு அறிவியல்; அதற்கான நிபந்தனைகள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.”
“உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக் கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது.”
“நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும்.”
“ஒரு மனிதன் தனது எதிரிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க முடியாது.”
“பெண்களைப் படைத்ததன் நோக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்துகொள்வதற்காக அல்ல.”
“சிறிய அளவிலான நேர்மை ஓர் ஆபத்தான விஷயம்; பெரிய அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விஷயம்.”