மனநலம், உடல் நலம் பேணும் 7 செயலிகள்
உடல்நலம், மனநலனை எச்சரிக்கை மணி அடித்து, ‘உடல், மன நலமே முக்கியம்’ என நினைவூட்டினால் உதவியாக இருக்குமல்லவா? அதைத்தான் இந்தச் செயலிகள் செய்கின்றன.
Your dost - பள்ளி, கல்லூரி, அலுவலகம், தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த அனைத்து மனநலப் பிரச்சினைகளையும் பயனர்கள் இந்தச் செயலியில் பகிர்ந்து கொள்ளலாம்.
Evolve - நம்மை நாமே நேசிப்பதும் நமது குறைகளை ஏற்றுக்கொள்வதுமே இவ்வுலகில் வாழ்வதற்கான முதல் தகுதி. குறிப்பாகப் பால்புதுமையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது.
WYSA - செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இச்செயலி மூலம் மனநலச் சிக்கல் சார்ந்த கேள்விகளை எழுப்பலாம். அக்கேள்விகளுக்குத் தகுந்த உளவியல் பதில்களை இச்செயலி அளிக்கிறது.
Medi safe - நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு காலை, மதியம், இரவு வேளைகளில் அவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்துக்கு இச்செயலி நினைவூட்டுகிறது.
Pillow - நல்ல உறக்கமே பெரும்பகுதி உடல், மனநலப் பாதிப்பைக் குறைத்துவிடும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக உள்ள உறக்கத்தை மேம்படுத்துகிறது இச்செயலி.
Stepsetgo: Step Counter - நடைப்பயிற்சியின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக ‘ஸ்டெப்செட்கோ: ஸ்டெப் கவுன்டர்' செயலி உள்ளது.
Flo Periods and Pregnancy Tracker - மாதவிடாய் சுழற்சியைக் கண்காணித்து, மாதவிடாய்ச் சரியான நாளில் ஏற்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள ‘ப்ளோ பீரியட்ஸ்’ செயலி உதவுகிறது.
இங்கே குறிப்பிட்டுள்ள செயலிகளை கூகுள் ப்ளேஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். | தொகுப்பு: ரஷிதா சபுரா.மு