‘அல்சர்’ வருவதை தடுக்க 10 வழிகள்!
நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். நன்றாக மென்று சாப்பிட வேண்டும். பட்டினி கூடாது. சாப்பிட்டதும் படுக்கக் கூடாது.
கவலை, கோபம், எரிச்சல் இருக்குபோது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது மகிழ்வான மனநிலை தேவை.
மசாலா + காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவுகளை எவ்வளவு இயலுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள்.
கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன.
எச்.பைலோரி கிருமி அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. எனவே, சுத்தமான தண்ணீரைக் குடிப்பது முக்கியம்.
புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது.
வலிநிவாரணி, ஸ்டீராய்டு, உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது.
எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும். மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். | தகவல்கள்: மருத்துவர் கு.கணேசன்