ராதிகா to விசித்ரா: திரைத் துறை அத்துமீறல் மீதான கருத்துகள்

“கேரளா படப்பிடிப்பில், கேரவனில் ரகசிய கேமராவால் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுப்பர். அதனால், நான் அங்கு கேரவன் பயன்படுத்துவது இல்லை” - ராதிகா 

“மலையாள திரையுலகை போல தமிழிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது. தெலுங்கிலும் அதிகம்.  பூனைக்கு மணி கட்டியே தீர வேண்டும்” - ஷகீலா 

“கேரளாவை போல தெலுங்கு திரையுலக பாலியல் துன்புறுத்தல் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” - சமந்தா 

“பாலியல் அத்துமீறல் புகார்களை வெளியில் தெரிவித்து நீதி கேட்போர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது” - சின்மயி 

“சினிமாவில் மட்டுமல்ல சின்னத் திரைத் துறையிலும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது.” - குட்டி பத்மினி

“மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனமான செயல்” - பார்வதி  

“பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து உடனடியாக பேசுங்கள். அது நீதி கிடைக்க வழிவகுக்கும். ஹேமா கமிட்டி அறிக்கை தேவையான ஒன்று” - குஷ்பு 

“தெலுங்கு திரையுலகில் பாலியல் துன்புறுத்தலால் நான் பாதிக்கப்பட்டேன். ஆனால், நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை” - விசித்ரா

Web Stories

மேலும் படிக்க...