10 வெற்றி மொழிகள் by நெப்போலியன் பொனபார்ட்
பிரான்ஸ் நாட்டின் படைத் தளபதியும், பிரான்சின் முதல் பேரரசருமான நெப்போலியன் பொனபார்ட் உதிர்த்த 10 வெற்றி மொழிகள் இவை...
“முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.”
“உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.”
“சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.”
“சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.”
“இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.”
“வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.”
“இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.”
“முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார்.”
“நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.”
“வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.”