வல்லமை மிக்க கீரை - வல்லாரை நன்மைகள்
வல்லமை மிக்க கீரையே ‘வல்லாரை’. இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி', தாது உப்புக்கள் அடங்கி உள்ளன.
ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை, சரியான அளவில் கொண்டுள்ளது வல்லாரை கீரை.
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச் சத்துகளை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது வல்லாரை.
உடலின் வலு அதிகரிக்கவும், வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் வல்லாரை உதவுகிறது.
ரத்தக் குழாய்களை நெகிழ்வடையச் செய்கிறது; நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
காலை வேளையில் வல்லாரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை செயலாற்றல் பெறும். மனநலனுக்கு நல்லது.
இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது வல்லாரை கீரை.
வல்லாரையில் உள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள், புண்களைக் குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
வல்லாரை உண்ணும் காலங்களில் இறைச்சி, அகத்திக் கீரை, பாகற்காய் உண்ணக் கூடாது. புளி, காரத்தை குறைக்க வேண்டும்.
வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.
ரத்தச் சோகைக்கு (Anaemia: அரை தேக்கரண்டி வல்லாரை இலைச் சாற்றுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.
தூக்கமின்மை: அரை தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.
ஞாபகமறதி: 5 வல்லாரை இலைகளை இடித்துச் சாறெடுத்து, ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்துத் தினமும் உண்ணவும். | தகவல்: ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்