‘பச்சை முட்டை’ நல்லதா? - ஹெல்த் அலர்ட் குறிப்புகள்
‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் ஆபத்து உள்ளது.
‘பச்சை முட்டை’யின் வெள்ளைக் கருவில் ‘அவிடின்’ (Avidin) எனும் புரதச் சத்து உள்ளது.
இந்த ‘அவிடின்’, முட்டையில் உள்ள ‘பயாட்டின்’ எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
முட்டையை வேகவைத்து விட்டால், அந்த வெப்பத்தில் ‘அவிடின்’ அழிந்துவிடும். இதனால் முட்டையில் உள்ள ‘பயாட்டின்’ முழுமையாக உடலில் சேரும்.
‘அவிடின்’ சத்தைவிட ‘பயாட்டின்’தான் நமக்கு முக்கியம். குறிப்பாக, கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. எனவே, வேகவைத்த முட்டையே நல்லது.
முட்டையில் ‘சால்மோனல்லா’ போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. முட்டையை அவிக்கும்போது, அவை இறந்துவிடும்.
வேகவைத்து சாப்பிடுவதால், முட்டையின் மூலம் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளின் முட்டையில் மருந்து தாக்கம் இருக்கலாம். முட்டையை வேகவைத்தால் பாதிப்பு குறையும்.
வேகவைத்த ஒரு முட்டை சாப்பிட்டால், நம் உடலுக்கு 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது.
ஒரு நேரத்தில் இரண்டு முட்டைகள் சாப்பிட்டால், ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும்.
நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கிப் பயன்படுத்துவதே அனைவருக்கும் மிகச் சிறந்தது. | தகவல்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்.