மாங்கனியின் மருத்துவ நன்மைகள் - ஒரு பட்டியல்

மாம்பழம் கோடையின் கொடை. மாம்பழ சுவையைத் தாண்டி மாம்பழத்தில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.  

200 கிராம் எடை கொண்ட ஒரு மாங்கனியில் 150 கிலோ கலோரியும் 28 கிராம் மாவுச்சத்தும் உள்ளன. கொழுப்புச் சத்து மாங்கனியில் இல்லை.

கனிமச் சத்துகளான இரும்பு, காப்பர், மக்னீசியம் மாம்பழத்தின் சிறப்பு. இதன் சத்துகள் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்புரிந்து பார்வைத் திறனைச் சிறப்பாக பராமரிக்கிறது.   

25 கிராம் மாம்பழம் உணவாகும் பட்சத்தில், 5 கிராம் குளுக்கோஸ் உடல் பயன்பாட்டிற்கு ரத்தத்திலும் 20 கிராம் கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது.

செல்லுலோஸ் என்கிற நார்ச்சத்து மாம்பழத்தில் உள்ளது. 200 கிராம் மாங்கனியில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. குடல் நன்றாக இயங்க நார்ச்சத்து அவசியம். 

மாம்பழத்தில் உள்ள ‘பெக்டின்’ என்கிற நார்ச்சத்து உடலில் கொழுப்பு மிகுதியாகச் சேராமல் கண்காணிக்கும். இதய ரத்தக்குழாய்களின் நலனைப் பேணுவதில் இதன் பங்கு அதிகம்.  

விட்டமின் ஏ, பி, இ, சி மற்றும் கே ஆகியவை மாங்கனியில் அதிகமாக உள்ளன. 200 கிராம் மாங்கனியில் விட்டமின் சி, பீட்டா கரோட்டின், ஃபோலேட் அதிகளவில் உள்ளன.

பாலிஃபினால்கள், பிளாவனாய்டுகள் என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வேதிப் பொருள்கள் மாங்கனியில் அதிகம் உள்ளன. முதுமையில் விழித்திரை தேய்ந்து பார்வையற்ற நிலை தடுக்கப்படும். 

நன்மைகள்: மலச்சிக்கலை அகற்றும். இது மென்மையான உணவு என்பதால் இரைப்பைப் புண் வராமல் காக்கும். தோல், தலைமுடியைச் செழுமையாக்கும். | தகவல்: டாக்டர் இ.சுப்பராயன்  

Web Stories

மேலும் படிக்க...