குரங்கு அம்மை: அறிகுறிகள் முதல் சிகிச்சை வரை

Hindutamil

தற்போது உலக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது ‘MPox’ என அழைக்கப்படும் குரங்கு அம்மை.   

Hindutamil

எதனால் ஏற்படுகிறது? - குரங்கு அம்மை ஒரு வகை டி.என்.ஏ. வைரஸால் ஏற்படுகிறது. இது ஒரு ஆர்தோபாக்ஸ் வைரஸ். விலங்குகளிடம் இருந்து பரவுகிறது.   

Hindutamil

பெரிய அம்மைபோல் மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. 1958-ல் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. 1970-ல் மனிதர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது குரங்கு அம்மை.  

வைரஸின் வகைகள்: குரங்கு அம்மை வைரஸில் கிளேட் I, கிளேட் II என இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆப்பிரிக்காவிலும், 2-வது மேற்கு ஆப்பிரிக்காவிலும்  காணப்படுகின்றன.    

தொற்றுப் பரவல்: 2022-ல் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டது. இதுவரை 116 நாடுகளில் 99,176 பேருக்குக் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.  

அறிகுறிகள்: இந்த வைரஸ் உடலில் நுழைந்த 5-21 நாள்களில் நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், குளிர், தலைவலி, நிணநீர் கட்டிகளில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.   

எப்படிப் பரவுகிறது? - குரங்கு அம்மை பாதிப்பு அபூர்வமாகவே மனிதர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, குரங்குகளிடம் இருந்தே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.   

பாதிப்புகள்: குரங்கு அம்மை பாதிப்பானது உரிய மருத்துவ வழிகாட்டுதல் இருந்தால் சில வாரங்களில் குணமாகிவிடும். எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

குழந்தைகள், நோய் எதிர்ப்பாற்றல் குன்றியவர்கள், கர்ப்பிணிகளுக்கு அம்மையின் பாதிப்பு கூடுதலாக இருக்கும். எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.  

சிகிச்சை: நோய் முற்றிலும் குணமாகும் வரை தனிமை, உடல் சுத்தம், சமச்சீர் உணவு. தேவையான அளவு நீர் பருகுதல். | தகவல்கள் - டாக்டர் சு.முத்துச் செல்லக்குமார்

Web Stories

மேலும் படிக்க...

Click Here