ஐன்ஸ்டீனின் 11 வெற்றி மந்திரங்கள் - பிரச்சினையும் தீர்வும்!

இயற்பியல் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உதிர்த்த முக்கியமான 11 வெற்றி மொழிகள் இங்கே...

“மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

“வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக, மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.”

“அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.”

“மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.”

“ஒரு விஷயம் ஆழமாக பார்க்கப்படுவதால் மட்டுமே அதனைப் பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.”

“புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத் திறனுடன் தொடர்புடையது.”  

“ஒருவரின் அனுபவமே அவரின் ஒட்டுமொத்த அறிவாற்றலின் ஒரே ஆதாரமாக கருதப்படுகிறது.”

“ஒரு பிரச்சினை எந்த வழியில் ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான தீர்வைப் பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை தீர்க்க முடியாது.”

“முட்டாள்களுக்கும் மேதைகளுக்கும் உள்ள வித்தியாசம், மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.”

“தவறுகளே செய்யாத ஒருவர் இருக்கிறானென்றால், அவர் புதிதாக எதையுமே முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்.”

“நமது அணுகுமுறையில் உள்ள பலவீனமே, நமது கேரக்டரின் பலவீனமாக மாற்றம் பெறுகிறது.”

Web Stories

மேலும் படிக்க...