‘மீல் மேக்கர்’ நல்லதா, கெட்டதா? - ஹெல்த் டிப்ஸ்

‘மீல் மேக்கர்’ அடிப்படையில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? இது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்குக் கெடுதல்கள் உண்டா? - இதோ ஒரு பார்வை...

சோயா பீன்ஸில் இருந்து சோயா பால் தயாரிக்கப்படுகிறது. சோயா பால் கழிவுகளில் இருந்து சோயா எண்ணெய் உற்பத்தியில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது.  

இதை முதலில் தயாரித்து விற்ற நிறுவனத்தின் பெயர் ‘மீல் மேக்கர்’ என்பதால், இந்தப் பெயர் நிலைத்துவிட்டது. இது 1980-களில் விருந்துகளில் வெஜிடபிள் பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.

மீல் மேக்கரில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் ஆகிய சத்துகள் உள்ளன. நூறு கிராம் மீல் மேக்கரில் சுமார் 50 கிராம் புரதம் உள்ளது. வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது

இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதய நலத்துக்கு நல்லது. இதில் கொழுப்பு குறைவு. அதனால், உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொள்ளலாம்.

சைவ உணவாளர்கள் இதை இறைச்சிக்கு மாற்றாக எடுக்கலாம். புரதக் குறைபாட்டால் அவதிப்படுவோருக்கு சிறந்த உணவு. தொடர்ந்து உண்பதால் கெடுதல் ஏற்படாது. | தகவல்: மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...