10 பலன்கள் - கறுப்புக் கொண்டைக் கடலை மகத்துவம்!

தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் கறுப்புக் கொண்டைக் கடலையின் பயன்கள் இங்கே... 

கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப் பொருட்கள் அதிகமுள்ளன.

வெள்ளைக் கொண்டைக் கடலையைவிட கறுப்புக் கொண்டைக் கடலையில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.

குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் கறுப்புக் கொண்டைக் கடலையை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

கறுப்புக் கொண்டைக் கடலையின் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

கறுப்புக் கொண்டைக் கடலையில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச் சத்துகள் உள்ளன.

கறுப்புக் கொண்டைக் கடலையை அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

வேக வைத்த கறுப்புக் கொண்டைக் கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும்.

முதிராத கறுப்புக் கொண்டைக் கடலையில் சிறிது நீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும்.

சிறுநீர்ப் பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக் கடலை சுடுநீருக்கு உண்டு.

இளம் கறுப்புக் கொண்டைக் கடலை விதைகளுக்குக் காமம் பெருக்கும் செய்கை உண்டு. | தொகுப்பு: ஆதி

Web Stories

மேலும் படிக்க...