இதயம் காக்க ‘அலர்ட்’ குறிப்புகள்! - இளைஞர்கள் கவனத்துக்கு...

சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு இளைஞர்களிடம் அதிகரிக்கிறது. 20 - 35 வயதினர் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

12 மணி நேரம் வேலை, இரவுப் பணி, வேலை அழுத்தம், முறையற்ற உறக்கம், உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவை இதயம் தொடர்பான நோய்களுக்குக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மன அழுத்தம், பதற்றத்தால் அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால் இதயத் துடிப்பின் வேகம், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இதயத்தை பாதிக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அதிகரித்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி இன்மை, உடல் பருமனால் இதய நோய் ஏற்படுகின்றன.  

மன அழுத்தமானது இதயத் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த உறைவை உண்டாக்குகிறது. இது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.  

வாரம் 55 மணி நேரம் மேலாக வேலை செய்பவோருக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 13% அதிகம் என மருத்துவ இதழான ‘லான்செட்’ ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

தீர்வு: முறையான உணவு, தூக்கத்தைக் கடைப்பிடித்து தினசரி உடற்பயிற்சி செய்தல்; புகைபிடித்தல், மதுப் பழக்கத்தை முற்றிலுமாக விடுதல் அவசியம். | தொகுப்பு: மாயா

Web Stories

மேலும் படிக்க...