6 சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள் @ சென்னை | Chennai Day Special

மல்டிப்ளக்ஸ் யுகத்தில் சென்னையில் இன்னமும் ஜீவித்திருக்கும் ‘சிங்கிள் ஸ்கிரீன்’ தியேட்டர்கள் இதோ...

கேசினோ: சென்னையில் 1941-ல் தொடங்கி, 75 ஆண்டு கடந்து இன்றும் உயிர்ப்போடு இயங்கி வரும் தியேட்டர். தற்போது புதுப்பிக்கப்பட்டு ஒற்றை திரையுடன் இயங்குகிறது.

அண்ணா: ஒருகாலத்தில் சென்னையின் முக்கிய தியேட்டர்களில் ஒன்று. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி,கமல் நடித்த படங்கள் இங்கு 100 நாள் விழா கொண்டாடின. 

பரங்கிமலை ஜோதி: சென்னையின் மிக பிரபலமான தியேட்டர் இது. 50 ஆண்டுக்கும் மேலாக இயங்கும் இதில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல படங்கள் வெற்றி விழா கண்டுள்ளன.

கிருஷ்ணவேணி: பரபரப்பான தி.நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1964ல் தொடங்கப்பட்டது. 2021ல் புதுப்பிக்கப்பட்டு இங்கு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

பாரத்: சென்னையில் மற்றொரு பழமையான தியேட்டர். 1950ல் தொடங்கப்பட்ட இதில், ‘பராசக்தி’, ‘அண்ணாமலை’, ‘சின்ன தம்பி’ ஆகிய படங்களை 100 நாட்களைக் கடந்து ஓடின.

வெல்கோ சினிமாஸ்: பம்மலில் உள்ள இந்த தியேட்டர் 1968ல் தொடங்கப்பட்டது. ‘பாரதவிலாஸ்’, ‘16 வயதினிலே’ ஆகிய படங்கள் இங்கு 150 நாட்களை கடந்து ஓடின.

Web Stories

மேலும் படிக்க...