90 அடி உயர அனுமன் சிலை @ அமெரிக்கா

Hindutamil

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரின் புதிய அடையாளமாக இது மாறியுள்ளது. 

Hindutamil

அமெரிக்காவின் 3-வது உயரமான சிலை என்ற பெருமை பெறுகிறது அனுமன் சிலை. நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை 151 அடி, ஃப்ளோரிடாவின் டிராகன் சிலை 110 அடி ஆகும். 

Hindutamil

இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ (Statue of Union) என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள மிக உயரமான அனுமன் சிலை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 

90 அடி உயரம் கொண்ட வெண்கலத்திலான இந்த பிரம்மாண்ட அனுமன் சிலை, அமெரிக்காவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வெளியில் ஒரு புதிய மைல்கல். 

இந்திய சுதந்திர தினத்தன்று தொடங்கிய அனுமன் சிலை பிரதிஷ்டை விழா ஆகஸ்ட் 18 வரை நடைபெற்றது. அப்போது, ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. 

சிலைக்கு 72 அடியிலான பிரம்மாண்ட மாலை சூட்டப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமர், அனுமன் பெயர்களை பக்தியுடன் முழங்கினர்.

Web Stories

மேலும் படிக்க...

Click Here