9 குறிப்புகள் @ முருங்கை இலை மருத்துவப் பயன்கள்!
கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் 3 மடங்கு அதிகமாக உள்ள இரும்பு சத்தைக் கிரகிக்கும் தன்மையை நமது உடல் கொண்டுள்ளது.
முருங்கை இலையை நேரடியாக வெயிலில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறைந்துவிடும். நிழலில் உலர்த்தினால் 70% வைட்டமின் ஏ சத்து தங்கியிருக்கும்.
கோடைக் காலம், மழைக் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.
வறண்ட காலம், குளிர் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும்.
முருங்கை இலையுடன் தக்காளியைச் சேர்த்துச் சமைத்தால் வைட்டமின் ஏ சத்து நீங்கிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக பரோடா பல்கலை. ஆய்வு கூறுகிறது.
முருங்கை இலையில் உள்ள isothiocyanate வேதிப் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தரும். உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும் என்கின்றன ஆய்வுகள்.
நிழலில் உலர்த்திய முருங்கை இலைப்பொடியை ஒரு நாளைக்கு 7 கிராம் வீதம் மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு 13.5% குறையலாம்.
முருங்கை இலையில் உள்ள chlorogenic acid என்ற வேதிப்பொருள், சாப்பிட்ட பின் ரத்தத்தில் உயரும் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும்.
ரத்த அழுத்த விகிதத்தைச் சரியாகப் பராமரிக்க உதவும் Quercetin என்ற வேதி பொருள், முருங்கை இலையில் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.