10 தெறிப்புகள் @ ‘வாழை’ நிகழ்வு
மாரி செல்வராஜ் - “என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது.”
பா.ரஞ்சித் - “பரியேறும் பெருமாள் தான் நல்ல படம் என்றால் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மொக்கையா ? வலியின் பதிவை ஏற்கும் கூட்டம், எதிர்க்கும்போது ஏற்க மறுக்கிறது.”
வெற்றிமாறன் - “பல சவால்களை சந்தித்து முன்னேறி வந்துள்ளார் என்பதை இந்தப் படத்தின் மூலம் மாரி வெளிப்படுத்தியுள்ளார். படம் பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.”
மிஷ்கின் - “கொட்டுக்காளி’, ‘வாழை’ இரண்டு படங்களும் எனக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தன. உலக சினிமாவின் கோட்டை கதவை உடைத்துள்ளன.”
இயக்குநர் ராம் - “வணிக ரீதியாக வென்ற பின் ‘வாழை’யை எடுக்கலாம் என மாரியிடம் சொன்னேன். இப்போது நடந்துவிட்டது.”
அமீர் - “நான் தரையில் அரசியல் பேசுபவன்; திரையில் அல்ல. படத்தில் ஆசிரியையுடனான சிறுவனின் அன்பு அழகாக இருந்தது.”
ஜி.வி.பிரகாஷ் - “படம் பார்த்த போது உலக சினிமா அனுபவம் கிடைத்தது. இறுதிக் காட்சி உங்களை நிச்சயம் உலுக்கிவிடும்.”
சூரி - “இவ்ளோ நாள் அடிச்சது சிக்ஸ் கிடையாது; இதான்டா சிக்சர் என்பது போல மாரி இயக்கியுள்ள படம் தான் வாழை.”
நெல்சன் - “அழ வைக்கும் படமாக இருக்கும் என நினைத்தேன். தன் பயோகிராஃபி என்றார். இரண்டு வாழ்வியலைக் கொண்ட படம் இது.”
சரத்குமார் - “வாழ்க்கையில் துவண்டுபோய் இருப்பவர்களை தட்டியெழுப்பும் படமாக வாழை இருக்கும்.”