வெள்ளைக் கொண்டைக் கடலையும் 8 நன்மைகளும்!

புரதம் நிறைந்த வெள்ளைக் கொண்டைக் கடலையை சில மணி நேரம் ஊற வைத்துதான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ‘சென்னா’ எனப்படும் இதன் 8 நன்மைகள் இதோ...

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், செரிமானக் கோளாறுகளைச் சீர்செய்ய வெள்ளை கொண்டைக்கடலை உதவியாக இருக்கிறது.

எலும்பு, தசை, குருத்தெலும்பு, தோல், ரத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் புரதத்தை அதிகம் தருகிறது வெள்ளை கொண்டைக் கடலை.

நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் மாங்கனீசு ‘வெள்ளை கொண்டைக்கடலை’யில் அதிகமாக இருக்கிறது.

ஒரு கப் வெள்ளை கொண்டைக் கடலையை உட்கொண்டால் அன்றாட தேவையில் 84.5% மாங்கனீசு கிடைக்கும்.

பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், பைட்டோ ஆஸ்டிரோஜன்ஸ் எனப்படும் தாவர ஹார்மோன்களை கொண்டிருப்பதால் பெண்களின் ஹார்மோன் அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது.

வெள்ளை கொண்டைக் கடலை இரும்புச்சத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

வெள்ளை கொண்டைக் கடலை குறைந்த சர்க்கரை அளவை கொண்டிருப்பதால், மெதுவாகச் செரிமானம் அடையும், எடை குறைப்புக்கும் உதவும்.

கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதால், உடலின் ரத்தச் சர்க்கரை அளவை நிலைப்படுத்த வெள்ளை கொண்டைக் கடலை உதவுகிறது.

Web Stories

மேலும் படிக்க...