சென்னையின் அடையாளங்கள் அன்றும் இன்றும்... | சென்னை தினம் ஸ்பெஷல்

1802-ல் கட்டி முடிக்கப்பட்ட ‘ராஜாஜி ஹால்’ அரங்கு இது. சிறப்பு மருத்துவமனையாக மாறிய புதிய சட்டப்பேரவை வளாகம் 2010-ல் கட்டப்பட்டபோது, தப்பிய ஒரே பழைய கட்டிடம் இதுதான். 

அண்ணா சாலை எனப்படும் பழைய மவுன்ட் ரோடு 400 ஆண்டுகளுக்கு முந்தையது. இன்று தன்மை மாறிவிட்டது. 1910-களில் ரவுண்டானாவாக மாறிய இப்பகுதி பரபரப்பாகவே உள்ளது.

அரிய பெருமைகள் கொண்ட சென்னை அருங்காட்சியகத்தின் 1900-ம் ஆண்டை ஒட்டிய படம். இன்றும் காக்கப்பட்டு வரும் சில பழமையான கட்டிடங்களில் இந்த மியூசியம் அரங்கும் ஒன்று. 

சென்னை நகரம் கண்ட பல மாற்றங்களுக்கு மவுன சாட்சிதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். அன்றைய பக்கிங்ஹாம் கால்வாயை இன்று பார்ப்பது வியப்பு.

1880-களில் பங்களாவாக மாறுவதற்கு முன், ஐஸ் ஹவுஸ் பகுதியில் மணல் பரந்த மெரினாவும் இல்லை, கடற்கரைச் சாலையும் இல்லை. இன்று விவேகானந்தர் இல்லம். 

உலகிலுள்ள பழமையான செனட் இல்லங்களில் ஒன்று, சென்னை பல்கலைக்கழக செனட் இல்லம். இன்று அருகே பல புதிய அடையாளங்கள் வந்துவிட்டன.

எஸ்பிளனேடு எனப்படும் இன்றைய என்.எஸ்.சி. போஸ் சாலையின் பாரிமுனை சந்திப்பு இது. 1900-க்கு முன் குதிரை வண்டிகள் சாவகாசமாக நடைபயிலும் இடமாக இருந்தது. 

கடற்கரை ரயில் நிலையம் எதிரே 1862 வரை மதராஸ் மாகாண உச்ச நீதிமன்றமே இயங்கியதாம். அதே வளாகத்தில் இருந்த உயர் நீதிமன்றம் 1892-ல்தான், பாரிமுனைக்கு வந்தது.

சற்றே பெரிய மசூலா படகுகளின் பின்னணியில், 1881-களில் திறக்கப்பட்ட சென்னை துறைமுகத்தின் அந்தக் காலத் தோற்றம். சென்னை துறைமுகம் தந்த குழந்தைதான் மெரினா.

Web Stories

மேலும் படிக்க...