சென்னையின் அடையாளமாக 6 மருத்துவமனைகள் | சென்னை தினம் ஸ்பெஷல்

Hindutamil

1. எழும்பூர் கண் மருத்துவமனை: மருத்துவர் ராபர்ட் ரிச்சர்ட்சன் ராயப்பேட்டையில் மெட்ராஸ் கண் மருத்துவனையை 1819-இல் நிறுவினார். பின்னர் எழும்பூர் பகுதிக்கு இம்மருத்துவமனை மாற்றப்பட்டது. 

Hindutamil

இந்தியாவில் முதல் கண் வங்கி, 1948-இல் இங்கேதான் உருவாக்கப்பட்டது. ‘Madras Eye ’ பாதிப்பு எழும்பூர் கண் மருத்துவமனையில்தான் முதல் முதலாகக் கண்டறியப்பட்டது.  

Hindutamil

2. அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை: பெண்களுக்காகப் பெண்களே மருத்துவச் சேவை அளிக்க, திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்ட மருத்துவமனை இது.

நூறாண்டுகளாகச் சிறப்பான மகப்பேறு சிகிச்சையை அளிக்கும் இம்மருத்துவமனையில் மகப்பேறு, மகளிர் நோயியல் மட்டுமன்றி, குழந்தை நலம், பொது மருத்துவம் என பல பிரிவுகள் உள்ளன. 

கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய் சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி போன்றவையும் கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.

3. ஸ்டான்லி மருத்துவமனை: 200 ஆண்டுகள் பழமையானது என்றாலும், இம்மருத்துவமனை 1938-ஆம் ஆண்டில் தான் முறைப்படி நிறுவப்பட்டது ‘ஸ்டான்லி மருத்துவமனை’.

நாட்டின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிறப்புமிக்க அறுவை சிகிச்சைகளை ஸ்டான்லி மருத்துவமனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

4. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை: 200 ஆண்டுகளுக்கு முன்னரே மன நலத்துக்கென சென்னை - கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. 1871-இல் நிறுவப்பட்டது.

தற்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மன நலப் பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்புக்காக மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

5. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை: இந்தியாவில் உயர் சிகிச்சை மருத்துவத்தின் மையமாக உள்ள இந்த மருத்துவமனைக்கு பல நாடுகளிலிருந்து மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். 

தரமான சிகிச்சைகளை வழங்குவதில் பெயர் பெற்ற ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 130 அறுவை சிகிச்சைகளும், 113 டயாலிசிஸ் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

6. ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை: நவீன சென்னையின் மருத்துவ அடையாளமான இந்த மருத்துவமனையில் இதயம், புற்றுநோய், நரம்பியல் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் இதயம் தொடர்பான 24,000 சிகிச்சைகளை இம்மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டது. இங்குள்ள ‘முழு உடல் பரிசோதனை மையம்’ பெரும் வரவேற்பை பெற்றது. |  தொகுப்பு: இந்து குணசேகர் | 

Web Stories

மேலும் படிக்க...

Click Here