‘இடஒதுக்கீடு திருட்டு’ முதல் ‘தடுப்புச் சுவர்’ மார்பு வரை - பிரச்சாரத்தில் மோடியின் 10 பாயின்ட்ஸ்
“நாங்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால், காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் வாக்கு வங்கி அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றன.”
“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 100 சதவீதம் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது.”
“அம்பேத்கர் வரையறுத்த அரசமைப்பு சாசனத்தில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை. ஆனால், காங்கிரஸ் மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.”
“பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை குறைத்து மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.”
“நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். பிற்படுத்தப்பட்டோர் மட்டுமன்றி பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டையும் திருட காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.”
“இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கு எதிராக பாஜக தீரமாகப் போரிட்டு வருகிறது.”
“ஏழைகளின் சொத்துகளை இண்டியா கூட்டணி கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. அவர்களை தடுத்து நிறுத்துவோம்.”
“நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் அதிக வரி விதிக்கும். உங்கள் ஆயுள் முடிந்த பிறகு, அது உங்கள் மீது பரம்பரை சொத்து வரியைச் சுமத்தும்.”
“உங்கள் சொத்துகளைப் பறிக்கும் காங்கிரஸின் திட்டத்துக்கு தடையாக, உங்களுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் தடுப்புச் சுவராக 56 இன்ச் மார்பு கொண்ட மோடி நிற்கிறேன்.”
“இன்று காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி), மோடியைத் திட்டுவதன் மூலம் மகிழ்ச்சியடைகிறார்.”