மோடியின் பேச்சும் ரியாக்ஷன்களும் | மைக் டெஸ்டிங்
“மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெண்களின் தாலிச் செயின்கள் மீதும் கண்வைப்பார்கள்.” - நரேந்திர மோடி
“இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை.” - மல்லிகார்ஜுன கார்கே
“பாபாசாஹிப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை அழிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.” - ஜெய்ராம் ரமேஷ்
“உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்ப அவர் (மோடி) பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை வைத்துள்ளார்” - ராகுல் காந்தி
“வரும் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே பிரதமர் மோடி இப்படி எல்லாம் பேசுகிறார்.” - சஞ்சய் ராவத்
“நாட்டில் உள்ள சுமார் 20 கோடி (முஸ்லிம்கள்) மக்கள், பிரதமர் மோடிக்கு ஒரு பொருட்டு இல்லையா? அரசியல் மிகவும் கீழ்த்தரமான அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது.” - கபில் சிபல்
“இன்று 21 கோடீஸ்வரர்களிடம் 70 கோடி இந்தியர்களைவிட அதிகமான சொத்துகள் உள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி ஒருபோதும் மக்களிடம் வாய் திறக்கமாட்டார்.” - ஜெய்ராம் ரமேஷ்
“மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்யும் உண்மையை சொன்னதால் இண்டியா கூட்டணியில் பீதி நிலவுகிறது.” - நரேந்திர மோடி
“பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானது. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்” - மு.க.ஸ்டாலின்