மோடி சொல்லும் ‘பேரலை’ முதல் பிடிஆர் ஒப்பீடு வரை | மைக் டெஸ்டிங்

“தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக் கூடிய திமுகவுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பாஜகவுக்கு பேரலை போன்ற மக்களின் ஆதரவால் பயப்படுகிறார்கள்.” - பிரதமர் மோடி

“மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதுமா? பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டாமா?” - அன்புமணி ராமதாஸ்

“ஆளும் திமுக அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு இதுவே தகுந்த தருணம். திமுகவுக்கு மாற்று தமிழகத்தில் பாஜக மட்டுமே.” - வானதி சீனிவாசன்

“இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம். மோடி ஆட்சியில் எல்லாருடைய உரிமைகளும் பறிக்கப்பட்டது.” - கனிமொழி

“இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது.” - ராஜ்நாத் சிங்

“ஜனநாயகம், சகிப்பு தன்மை, சக வாழ்வுக்கு எதிராக 2 ஆபத்துகள் எழுந்துள்ளன. ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல், இன்னொன்று பொது சிவில் சட்டம். இது இரண்டும் பேராபத்து.” - ப.சிதம்பரம்

“நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள்தான் காரணம்.” சீமான்

“அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கிறார்கள். தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?” - அண்ணாமலை

“நமது பிரதமர் நாட்டின் பன்முக தன்மையை மதிக்க மறுக்கிறார். பல்வேறு ஒற்றுமைகளுடன் வாழ்வதுதான் நமது இந்திய நாடு.” - ராகுல் காந்தி

“எய்ம்ஸ் வேண்டி ஒற்றை செங்கல் சுமக்கும் உதயநிதி, பல லட்சம் செங்கற்களால் தலைவாசலில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காதது ஏன்?” - எடப்பாடி பழனிசாமி

“கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டியது போல வரும் 19-ஆம் தேதி அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும்.” - உதயநிதி ஸ்டாலின்

“பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது.” - மு.க.ஸ்டாலின்

“யாரும் எந்தக் கடவுளையும் கும்பிடலாம். இந்தக் கடவுளைத்தான் கும்பிட வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. மோடி ராஜதந்திர அரசியலை காங்கிரஸிடம் காட்டுகிறார்.” - கார்கே

“காரை ஓட்டத் தெரியாதவர் போல மோடி ஆட்சி. வளர்ச்சியின்போது ‘பிரேக்’ போட்டு தடுக்கிறார். நிதானம் தேவையானபோது ‘ஆக்சிலேட்டரை’ அழுத்துகிறார்.” - பழனிவேல் தியாகராஜன்

Web Stories

மேலும் படிக்க...