ஸ்டாலின் Vs அண்ணாமலை முதல் சீமான் சொன்ன ‘ரூ.500 கணக்கு’ வரை | மைக் டெஸ்டிங்
“இந்த தேர்தல், ஊழலை இந்தியாவைவிட்டே அகற்றும் தேர்தல். திமுகவின் குடும்ப அரசியலை இந்தியாவை விட்டே வெளியேற்றும் தேர்தல்.” - பிரதமர் மோடி
“ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷினாக பாஜக செயல்பட்டு வருகிறது. ” - செல்வப்பெருந்தகை
“கச்சத்தீவில் யார்தான் வசிக்கிறீர்கள்? பிரதமர் மோடி ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” - திக்விஜய் சிங்
“நேருவின் சிந்தனை இன்னமும் காங்கிரஸார் மனங்களில் அப்படியே இருக்கிறது. இதனால்தான் காங்கிரஸால் வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை.” - கங்கனா ரணாவத்
“பருவக் காலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழகத்தில் வட்டமடிக்கிறார் பிரதமர் மோடி.” - மு.க.ஸ்டாலின்
“பிரதமர் ஒரு பறவையைப் போல பாசமாக எங்களைப் பார்க்க வருகிறார். நம்மிடம் அடைக்கலம் தேட வருகிறார். பெருச்சாளி போல கோபாலபுரத்தில் ஒளியவில்லை.” - அண்ணாமலை
“சமூக நீதியை நிலைநாட்டுவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சாத்தியப்படாது. அது தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சு.” - அகிலேஷ் யாதவ்
“பிரதமர் மோடியைக் கண்டால் முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு பயப்படுகிறார். அண்ணன் ஸ்டாலினுக்கு இப்போது தூக்கம் வரவில்லை.” - தமிழிசை சவுந்தரராஜன்
“அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது.” - ராகுல் காந்தி
“தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரன் போன்ற அதிகாரத்துக்காக கட்சி மாறும் பச்சோந்திகளை டெபாசிட் இழக்க செய்யுங்கள்.” - எடப்பாடி பழனிசாமி
“ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயகத்தை கொண்டு வர முயற்சித்து வருகிறது பாஜக” - பிரகாஷ் காரத்
“பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரை வைத்துக்கொண்டு அதானிக்கும், அம்பானிக்கும் கால் பிடிக்கும் பாஜகவோடு கூட்டணி சேரலாமா?” - டி.ராஜா
“எதிர்த்து பேசினால் உடனே சிறைவாசம். இதுதான் மோடி ஸ்டைல். எனவே, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.” - ஆ.ராசா
“வாக்காளர்களுக்கு ரூ.500-ஐ கொடுத்துவிட்டு ரூ.500 கோடி எடுப்பதுதான் இன்றைய அரசியல்” - சீமான்