‘ராமர்’ வியாபாரம் முதல் திஹார் Vs ராஜ்பவன் வரை | மைக் டெஸ்டிங்
“பாஜகவினர் ராமரை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள். ஆனால், நாங்கள் ராமரை பூஜிப்பவர்கள்.” - ஜெய்ராம் ரமேஷ்
“பிரதமர் மோடியின் ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.” - அமித் ஷா
“பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்று விடுகிறோம்.” - சீமான்
“அயோத்தியில் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்ததன் மூலம் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்தது.” - பிரதமர் மோடி
“என் மகன் அனில் கே.அந்தோணி பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். அவர் தோற்க வேண்டும் என விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிதான் எனது மதம்” - ஏ.கே.அந்தோணி
“தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி ஜோதிடம் பார்த்து கூறியவரை கைது செய்தது பாசிசத்தின் உச்சமான நடவடிக்கை.” - அன்புமணி ராமதாஸ்
“பாஜகவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும். பாஜக அரசை வீழ்த்துவது தான் ஒன்றை இலக்கு. ” - திருமாவளவன்
“அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைப்பேன் என கூறுவதுதான் பிரதமர் மோடியின் உத்தரவாதம்.” - மம்தா பானர்ஜி
“திமுக ஆட்சியில் ஒரு குடும்பம்தான் வாழ்கிறது என்று மோடி சொல்கிறார். ஆமாம், ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவின் குடும்பம்தான். கருணாநிதியின் குடும்பம்தான்.” - உதயநிதி ஸ்டாலின்
“திஹார் சிறையில் இருந்த கனிமொழி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த நான் போட்டியிடக் கூடாதா?” - தமிழிசை சவுந்தரராஜன்
“கொடுமையான கரோனா காலத்தில் நம் நாட்டு மக்களை காப்பாற்றியவர் விஷ்வ குரு பிரதமர் நரேந்திர மோடி.” - நமீதா
“தாமரையும், இரட்டை இலையும் நாணயத்தின் இரு பக்கங்கள்.” - கே.பாலகிருஷ்ணன்