சீமான் கேள்வி முதல் மோடியின் ‘நல்ல நண்பர்’ வரை | மைக் டெஸ்டிங்
“காங்கிரஸுக்கும், இண்டியா கூட்டணிக்கும் ராமர் கோயில் கட்டப்பட்டதில் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.” - பிரதமர் மோடி
“முன்பு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜக சமூக நீதி பேசியதா?” - சீமான்
“கோவையில் வாக்காளர்களுக்கு தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் திமுக வெற்றி பெறாது” - அண்ணாமலை
“வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலினின் தொடர் நாடகத்துக்கு அறிவார்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மயங்க மாட்டார்கள்” - எடப்பாடி பழனிசாமி
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது.” - முதல்வர் ஸ்டாலின்
“நான் மாட்டிறைச்சி உள்ளிட்ட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது.” - கங்கனா ரணாவத்
“எனக்கு கட்சியிலும், மக்களிடமும் எதிர்ப்பு கிடையாது. அரசியல் மீது மக்களுக்கு விருப்பம் குறைந்துள்ளதால் கூட்டங்களுக்கு வருவதில்லை.” - கார்த்தி சிதம்பரம்
“காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை இண்டியா கூட்டணி கட்சிகள் குடும்ப அரசியலை மையமாக கொண்டுள்ளன.” - ஜே.பி.நட்டா
“பிரதமர் மோடி இங்கேயே குடியிருந்தாலும் கூட பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது.” - உதயநிதி ஸ்டாலின்
“பாஜகவில் தலைவர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ரெடிமேட் அரசியல்வதியாக அண்ணாமலை கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.” - ஆர்.பி.உதயக்குமார்
“இண்டியா கூட்டணியை நிர்வகிக்கும் திறமை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு.” - வைகோ
“சொந்த ஊரான கரூரில் வெல்ல முடியாது என்பதால் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, அங்கும் வெல்லப் போவதில்லை.” - காயத்ரி ரகுராம்
“பிரதமர் நரேந்திர மோடியும், நானும் நல்ல நண்பர்கள். அவர் சொல்லித்தான் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறேன்” - ஜான்பாண்டியன்
“இண்டியா கூட்டணிக்கு எதிராக பாஜக அரசு ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது.” - பிரகாஷ் காரத்