பாஜகவின் 10 ஆண்டு ‘சூப்’ முதல் செல்லூர் ராஜூ ‘நோபல்’ பரிந்துரை வரை | மைக் டெஸ்டிங்
“பத்து ஆண்டு பாஜக ஆட்சி என்பது உணவுக்கு முன்பு வழங்கப்படும் ‘சூப்’ போன்றது. இனிதான் பிரம்மாண்ட விருந்து காத்திருக்கிறது” - பிரதமர் மோடி
“சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? மருத்துவர் ராமதாஸ்.” - முதல்வர் ஸ்டாலின்
“தெய்வ சக்தி உள்ள அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்கள் தானாக அழிந்து போய்விடுவர்.” - எடப்பாடி பழனிசாமி
“அண்ணாமலை காவல் அதிகாரியாக இருந்தபோது பிடித்த திருடர்களை விட, பாஜக தலைவரான பிறகு பிடித்த திருடர்களே அதிகம்.” - ஜி.ராமகிருஷ்ணன்
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்!” - திருமாவளவன்
“பிரதமர் மோடி தமிழகத்திலேயே தங்கினாலும், இங்கு ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது.” - உதயநிதி ஸ்டாலின்
“பிரதமர் மோடி குறித்து பேச உதயநிதிக்கு எந்த அருகதையும் இல்லை” - வானதி சீனிவாசன்
“நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என ப.சிதம்பரம் சொல்கிறார். உண்மையில் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோருக்குத்தான் வேலையில்லை.” - அண்ணாமலை
“மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே பிரதமர் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ சிறைக்கு சென்ற வரலாறு கிடையாது.” - துரைமுருகன்
“கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.” - நடிகை குஷ்பு
“பொய்யான வாக்குறுதியை நம்பி திமுகவுக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டீர்கள். ஜனவரி, பிப்ரவரியை தவிர அனைத்து வரியையும் ஏற்றிவிட்டனர்.” - நடிகர் சிங்கமுத்து
“மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா, என அவருக்கே தெரியாது” - திண்டுக்கல் ஐ.லியோனி
“எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தால் இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” - சி.ஆர்.சரஸ்வதி
“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நான் பேசினால் மழை வரும் என்று சொல்கிறார். அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டாமா?” - செல்லூர் ராஜூ