காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024 - முக்கியமான 25 வாக்குறுதிகள்

1) சமூகப் பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். 2) குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

3) ‘‎நீட்’ முதலான கட்டாயமில்லை; மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம். 4) ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை கொண்டுவரப்படாது.

5) எஸ்சி, எஸ்டி & ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50% என்ற உச்ச வரம்பை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம்.

6) மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு. 7) புதிய ஜிஎஸ்டி முறை கொண்டுவரப்படும்.

8) நூறு நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்வு. 9) பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ‘ரோகித் வெமுலா சட்டம்’.

10) தேசியக் கல்வி கொள்கையானது, மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.

11) மாணவர்களுக்கான கல்வி கடன்கள் ரத்து; அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து.

12) ராணுவச் சேர்க்கைக்கான ‘அக்னி பாத்’ திட்டம் ரத்து செய்யப்படும். | 13) அரசியல் சாசனம் 8-வது அட்டவணையில் பல்வேறு மொழிகள் சேர்க்கப்படும்.

14) பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் உள்ளிட்டவை குறித்து விசாரணை. 15) ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை.

16) பாஜக 10 ஆண்டுகளில் கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் வாபஸ். 17) புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.

18) தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் 19) செஸ் வரி வசூலில் மாநிலங்களுக்கு அதன் உரிமைத் தொகையை வழங்க நடவடிக்கை.

20) ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும். 21) LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்க சட்டம்.

22) கட்சித் தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.

23) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம்.

24) பெண்களுக்கான ஊதியத்தில் உள்ள பாகுபாட்டை தவிர்க்க ‘ஒரே வேலை, ஒரே ஊதியம்’ திட்டம். | 25) ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்வு.

Web Stories

மேலும் படிக்க...