‘ஜெ. மாதிரி’ பிரேமலதா முதல் ‘தவழும் குழந்தை’ பாஜக வரை | மைக் டெஸ்டிங் @ ஏப்.4
“குரலற்றவர்களின் குரலாக, பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் திகழ்ந்து வருகிறார். சாதியம் தான் என் வாழ்வின் எதிரி” - மநீம தலைவர் கமல்ஹாசன்
“தமிழகத்தில் பாஜக சுண்டு விரலை பதித்துவிட்டால், பின்னர் பெரு விரல், தொடர்ந்து காலை ஊன்றிவிடுவர்.” - ப.சிதம்பரம்
“திமுகவையும், அதிமுகவையும் ஒவ்வொரு முறையையும் தோளில் சுமந்து வாழ வைத்தோம். துரோகம் எங்கள் பரம்பரையிலே கிடையாது.” - அன்புமணி ராமதாஸ்
“பாஜகவிடம் இருந்து எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தன. அவற்றை தூக்கியெறிந்து தைரியமாக ஜெயலலிதா மாதிரி முடிவெடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்தேன்” - பிரேமலதா விஜயகாந்த்
“வேட்டி - சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் ஷூட்டிங் செய்திருந்தார்.” - முதல்வர் ஸ்டாலின்
“அதிமுக பேரவையிலும், வெளியிலும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, 27 மாதங்கள் கழித்து மகளிர் உரிமைத் தொகையை வழங்கினர்” - எடப்பாடி பழனிசாமி
“மக்களவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்தப் போவது மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான்” - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.
“உலகில் உள்ள பல நாடுகள் திமுக அரசின் திட்டங்களை பின்பற்றுகின்றன.” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“அமைச்சர் மனோ தங்கராஜின் குடும்ப அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக ஜூன் 4-ம் தேதி இருக்கும்” - பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்
“பாஜக வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்கள் கிடையாது. பிளாஸ்டிக் நட்சத்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்” - நடிகை காயத்ரி ரகுராம்
“ஜெயலலிதா இருந்தபோது மோடியா, லேடியா என்றார். அந்த தைரியம் தற்போது பழனிசாமிக்கு ஏன் இல்லை?” - நடிகர் கருணாஸ்
“தேசிய அளவில் பாஜக கட்சி பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தை” - அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி