அண்ணாமலை சவால் முதல் சீமான் ‘ரூ.500 கோடி’ தகவல் வரை | மைக் டெஸ்டிங் @ ஏப்.2, 2024
“மகளிருக்கு காலையில் அரசு வழங்கும் பணம், இரவு டாஸ்மாக் மூலம் கஜானாவுக்கு திரும்புவது தான் திராவிட மாடல் ஆட்சி” - தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன்
“கச்சத்தீவு குறித்த ஆர்டிஐ தகவலை வைத்து பச்சைப் பொய்யை பரப்புகின்றனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
“கச்சத்தீவு விவகாரத்தில் வெளியிட்ட ஆர்டிஐ ஆவணம் பச்சைப் பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா?” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
“கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்துக்கு திமுக, பாஜக இரு கட்சிகளுமே துரோகிகள்தான்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூ.6,572 கோடி குவித்ததால், ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு அருகதை இல்லை” - தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
“எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கி உள்ளனர். எத்தனை பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டாலும் என்னை மக்களுக்கு நன்றாகத் தெரியும்.” - ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ்
“பொய்யான கருத்துக் கணிப்புகளைக் காட்டி, பாஜக அமோக வெற்றி பெறும் என்று வாக்காளர்களை திசை திருப்பும் ஏமாற்று வேலை செய்கிறார் மோடி” - கர்நாடக முதல்வர் சித்தராமையா
“எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும்” - விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
“சாதிவாரி கணக்கெடுப்புக்கு மறுத்த பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்?” - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“அண்ணாமலை வெளியிடும் சீரியல்கள் எல்லாம் வெத்து பட்டாசுதான்” சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்
“பாஜகவினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகளை கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும்.” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்