ஆர்.பி.உதயகுமார் ‘வாக்குமூலம்’ முதல் ஸ்டாலின் Vs எல்.முருகன் வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 30

“காங்கிரஸ், இண்டியா கூட்டணியைக் கண்டும் பாஜகவினர் அச்சப்படுகிறார்கள் என்பதையே ஐ.டி நோட்டீஸ் காட்டுகிறது.” - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

“இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு நரேந்திர மோடி அரசு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.” - கேரள முதல்வர் பினராயி விஜயன்

“ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம். இப்போது சீறும் சிங்கங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.” - ஆர்.பி.உதயகுமார்

“காங்கிரஸை முடக்க வரி பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக” - ரூ.1,823 கோடி செலுத்த கட்சிக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியதற்கு ஜெய்ராம் ரமேஷ் எதிர்வினை

“மொத்த தமிழ்நாட்டையும் வெற்றி பெற்று வர வேண்டும் என அண்ணாமலைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.” - பிரதமர் மோடி

“தேசிய கட்சியை முடக்கிவிட்டு, மாநில கட்சித் தலைவர்களை அச்சுறுத்திவிட்டு நாட்டில் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே மோடியின் எண்ணம்.” - ப.சிதம்பரம்

“வேலைவாய்ப்பு உருவாக்கி தந்த கோவை நகரில் இப்போது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு யார் காரணம் என மக்கள் சிந்திக்க வேண்டும்.” - பிரேமலதா விஜயகாந்த்

“பிரதமர் மோடி சமூக நீதியின் இலக்கணமாகத் திகழ்கிறார்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக பிரதமர் மோடி உள்ளார்.” பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன்

“கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும், பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக் கேட்போம்.” - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்” - விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

“எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவுக்கும் அவர் விசுவாசமாக இல்லை. அவர் போன்ற கெட்ட எண்ணம் கொண்டவர்கள் விரைவில் அழிக்கப்படுவர்.” - டிடிவி தினகரன்

“மோடி மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், வாக்களிக்கக் கூடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.” - அமைச்சர் தங்கம் தென்னரசு

“எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. திமுகவினர் வீடு வீடாக திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.” - அமைச்சர் அன்பில் மகேஸ்

“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது பாஜக. அதற்கு எதிரான கொள்கை உள்ள கட்சிகள் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளனர்.” - சீமான்

“மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?” - முதல்வர் ஸ்டாலின்

“உங்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுய பரிசோதனை செய்து பாருங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே” - எல்.முருகன்

Web Stories

மேலும் படிக்க...