ஸ்டாலின் Vs ராமதாஸ் - ‘சமூக நீதி’ வார்த்தைப் போர்!

“சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் சமூக நீதி பேசும் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது.” - ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் சமூக நீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நீதி குறித்த கவலை கிஞ்சிற்றும் தேவையில்லை.” - ராமதாஸ்

“சமூக நீதி பேசும் மருத்துவர் ராமதாஸ் , சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கைகோத்த மர்மம் என்ன? மனசாட்சி உள்ள பாமக தொண்டர்கள்கூட ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு உள்ளனர்.” - ஸ்டாலின்

“2004-ஆம் ஆண்டில் சமூக நீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன்தான் இப்போதும் உள்ளது.” - ராமதாஸ்

“பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பாஜக. இது, ராமதாஸுக்கு தெரியாதா?” - ஸ்டாலின்

“கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பாமகவால் முடியும்.” - ராமதாஸ்

“பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பாஜக செய்திருக்கிறது. அதை ராமதாஸ் மறந்துவிட்டாரா? - ஸ்டாலின்

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக் கொள்கைகளில் பாமக உறுதியுடன் போராடும்.” - ராமதாஸ்

“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ராமதாஸுக்கு கேரன்டி கொடுத்தாரா மோடி? இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா?” - ஸ்டாலின்

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அளித்த உத்தரவாதத்தை 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா என்பதை நேர்மை, மனசாட்சியுடனும் ஸ்டாலின் சிந்தித்த வேண்டும்.” - ராமதாஸ்

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பாஜக.” - ஸ்டாலின்

“இந்தியாவின் 6 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் மட்டும் மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் கூறுகிறார்.” - ராமதாஸ்

“சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது. அதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது.” - ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற வன்மம்தான் ஸ்டாலினிடம் உள்ளது.” - ராமதாஸ்

“மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும். சென்சஸ் எடுக்க முடியாது என்ற நடைமுறையெல்லாம் சமூக நீதிப் போராளியான ராமதாஸுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை.” - ஸ்டாலின்

“பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ” - ராமதாஸ்

“இதெல்லாம் தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார். அவர் மேல் வைத்திருக்கும் பெரும் மரியாதைக்காக இதற்கு மேல், நான் எதுவும் பேச விரும்பவில்லை.” - ஸ்டாலின்

“ஸ்டாலினுக்கு சமூக நீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.” - ராமதாஸ்

Web Stories

மேலும் படிக்க...