‘தமிழன்’ சிறப்பு முதல் ஒரு ரூபாய் ‘கணக்கு’ வரை - கமல்ஹாசன் தெறிப்புகள் @ ஈரோடு
“தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய். நாங்கள் வைத்துள்ள காந்தி, நேரு, படேல் போன்ற பெயர்களைக் கேட்டாலே அது தெரியும்.”
“தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழ்நாட்டின் வியூகம்.”
“சாப்பாடு போட்டு பிள்ளைகளை நாங்கள் கல்வி கற்க வைக்கும்போது, அவர்கள் எங்கே படித்து முன்னேறி விடுவார்களோ என்று எழுத முடியாத பரீட்சைகளை திணிக்கின்றனர்.”
“திமுக அரசு ஏழைகளுக்கான அரசு என்பதை நான் உணர்கிறேன் அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறோம்.”
“நாம் (தமிழகம்) ஒரு ரூபாய் வரி கொடுத்தால், மத்திய அரசிடம் இருந்து வெறும் 29 பைசாதான் திரும்ப வருகிறது.”
“இங்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் மாநிலங்கள், 1 ரூபாய் கொடுத்தால் 7 ரூபாய் கிடைக்கிறது. அப்படி கொடுத்தும் அவர்கள் இங்கு வேலை தேடி வருகின்றனர்.”
“இங்குள்ள அரசு செயல்படுத்தும் காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத்திட்டங்களை வடமாநிலங்களில் ஏன் செயல்படுத்தவில்லை.”
“29 பைசாவை வைத்து நாங்கள் பல நலத் திட்டங்களை இதை செய்யும்போது, 7 ரூபாயை வைத்து ஏன் பிஹாரில் செய்ய முடியவில்லை.”
“நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும்.”
“எங்களின் குரல் நியாயத்துக்காக ஒலித்துக் கொண்டு இருக்கும். அது எந்த கட்சி செய்தாலும் அதை பாராட்ட தயக்கம் இல்லை. இன்னும் செய்யுங்கள் என்று சொல்லுவோம்.”