இபிஎஸ் ‘முதுகெலும்பு’ முதல் ஹெச்.ராஜா ‘5 கிலோ அரிசி’ வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 29, 2024

“திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும்.” - திமுக எம்.பி கனிமொழி

“ஸ்டாலின் என்னை முதுகெலும்பு இல்லாதவர் என்கிறார். வெயிலிலும் மழையிலும் விவசாயம் செய்த உடம்பு இது. எனக்கு முதுகெலும்பு வலுவாக உள்ளது.” - அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்

“நமக்கு எதிரி திமுகதான். அதிமுக - திமுக இடையேதான் போட்டி. 5% வாக்குகளே உள்ள பாஜக ஒரு பொருட்டே அல்ல” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“நாங்களும் அதிமுகவை ஒரு போட்டியாகவே கருதவில்லை. பாஜகவின் அசுர வளர்ச்சியும், எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் ஜூன் 4-ல் தெரியும்” - நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன்

“மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்து இல்லாதோருக்கு தரப்படும் வாக்கானது குப்பைத் தொட்டியில் போட்டதற்கு சமம்” - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேர்தல் சமயத்தில் சிறையில் அடைக்கின்றனர். இது ஜனநாயக ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?” - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

“தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, பாஜக ஆட்சியை ஒரு இடத்தில்கூட விமர்சித்துப் பேசுவதில்லை” - அமைச்சர் எஸ்.ரகுபதி

“மற்றவர்களை அச்சுறுத்துவதுதான் காங்கிரஸ் கலாச்சாரம்” - ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களால் நீதித் துறைக்கு அழுத்தம் என்ற 600+ வழக்கறிஞர்களின் கடிதம் பற்றி பிரதமர் மோடி கருத்து

“தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப்பதை தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.” - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

“ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று தெரியாது. இது காலத்தின் கட்டாயம்” - விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

“தமிழக மக்களின் பசியை போக்க பிரதமர் மோடி 5 கிலோ அரிசி கொடுத்து வருகிறார்” - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

“தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பண வசதி இல்லை என்கிறார் நிர்மலா சீதாராமன். இது, ஏழைகளுக்கான தேர்தலாக இல்லை.” - இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்

Web Stories

மேலும் படிக்க...