பிரியங்கா கேள்வி முதல் கனிமொழி விமர்சனம் வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 28, 2024

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விவசாயிகள் மட்டும் கடனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருப்பது எப்படி?” - காங். பொதுச் செயலர் பிரியங்கா காந்தி

“100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.7 மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.700 கோடி செலவில் ‘நன்றி மோடி’ என பாஜக பிரச்சாரம் செய்யலாம்” - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

“ஊழலற்ற நாடாக இந்தியாவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஊழலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

“அக்னிபாத் திட்டம் நமது தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் விரும்பாத இந்த ‘அக்னி வீரர்’ திட்டத்தை நிறுத்தும்.” - காங். தலைவர் கார்கே

“நடிகர் விஜய் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால், அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்” - ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி

“மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பது தேர்தல் முடிவுக்குப் பின் தெரியும்” - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இல்லை.” - திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

“இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும்” - காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம்

“அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை.” - திமுக எம்.பி கனிமொழி

“தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் தேனி தொகுதி மக்கள் மட்டுமின்றி, திமுகவினரே குழப்பத்தில் இருக்கிறார்கள்.” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Web Stories

மேலும் படிக்க...