‘நாடகக் காதல்’ தடுப்பு முதல் வரிவிலக்கு வரை - பாமகவின் 10 முக்கிய வாக்குறுதிகள்

2021-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தி வெற்றி பெறும்.

நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இரு தரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாமக பாடுபடும்.

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு; மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை.

பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

வருமான வரிவிலக்கு: ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் அரசுக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிபதி ரோகிணி ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்து நடவடிக்கை.

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Web Stories

மேலும் படிக்க...