திமுக அமைச்சர் சபதம் முதல் ராமதாஸ் கேட்கும் ‘வரம்’ வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 26, 2024
“அதிமுகவின் பழைய வரலாற்றை உற்றுப் பாருங்கள்... பெரும் தோல்விக்குப் பின் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்” - சி.வி.சண்முகம் எம்.பி
“எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு நல்லது, இல்லை என்றால், எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” - கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்
“தேர்தலில் வெள்ளி, வெண்கலம் எல்லாம் கிடையாது. ஒரே பதக்கம் தங்கம் மட்டும்தான். அதைப் பெற்று எம்பியாக செல்வேன்” - சிவகங்கை காங். எம்.பி கார்த்தி சிதம்பரம்
“மக்கள் என்னை ஒரு நடிகையாக மட்டுமின்றி தன்னம்பிக்கை உள்ள பெண்ணாகப் பார்க்கிறார்கள்.” - விருதுநகர் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா
“மக்களவைத் களத்தில் திமுக, அதிமுக மட்டுமே உள்ளன. கோவையில் திமுக அட்டகாசமான வெற்றியை பெறும்.” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
“தேனி மக்களவைத் தொகுதியில் திமுக தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்!” - திமுக அமைச்சர் பி.மூர்த்தி
“கார்த்தி சிதம்பரம் பேச்சு அகம்பாவத்தின் உச்சம். ப.சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை மக்கள் மீட்க வேண்டும்.” - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
“இந்தத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்தால், இதுதான் கடைசி தேர்தலாக இருக்கக் கூடும்!” - தி.க. தலைவர் கீ.விரமணி
“நான் ‘கல்’லை காட்டுவதாக இபிஎஸ் கூறுகிறார். அடிக்கல் நாட்டு விழாவில் மோடியுடன் அவர் ‘பல்’லை காட்டுகிறார்.” - அமைச்சர் உதயநிதி
“கடவுள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், மது இல்லாத நாடு வேண்டும் என்று கேட்பேன்.” - பாமக நிறுவனர் ராமதாஸ்
“முஸ்லிம்கள் உருவாக்கியது என்பதால் ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஹிந்த்’ கோஷத்தை பாஜக கைவிடுமா?” - கேரள முதல்வர் பினராயி விஜயன்
“ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் பாஜகவை வெளியேற்றுவார்கள்” - திமுக எம்.பி கனிமொழி