‘சித்தி’ வாக்குறுதி, கமல் ‘வியூகம்’, அண்ணாமலை ‘டீ காசு’ - மைக் டெஸ்டிங் @ மார்ச் 25, 2024
“சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையேயான போராட்டமே மக்களவைத் தேர்தல் களம்” - திமுக அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு
“விருதுநகர் தொகுதியில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ‘நாட்டாமை’யைத்தான் கூப்பிடுவேன்” - பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார்
“ஈ.டி., சிபிஐ மிரட்டலால் பாஜகவில் எதிர்க்கட்சி தலைவர்கள் சேருகின்றனர். இது ஜனநாயக படுகொலை” - தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே
“மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தியாகம் என்பதைவிட வியூகம் என்று புரிந்துகொள்ள வேண்டும்” - கமல்ஹாசன்
“குலக்கல்வி மூலம் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டிய நிலையை மோடி உருவாக்கி உள்ளார்” - திமுக அமைச்சர் உதயநிதி
“நாங்கள் டீ குடிப்பது என்றாலும் சொந்தக் காசில் டீ குடிப்போம். இதுதான் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” - கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை
“செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். நான் சுயமரியாதைக்காரன். வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட மாட்டேன்.” - மதிமுக திருச்சி வேட்பாளர் துரை வைகோ
“நான் ஒரு தகுதியான காரியகர்த்தாவாகவும் நம்பகமான மக்கள் சேவகராகவும் செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன்.” - பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா
“தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை திமுக இப்போதே செய்திருக்காலாமே, ஏன் செய்யவில்லை” - இந்திய ஜனநாயக புலிகள் தலைவர் மன்சூர் அலிகான்