இபிஎஸ் நம்பிக்கை, அண்ணாமலை உறுதி, அன்புமணி இலக்கு! - மைக் டெஸ்டிங் @ மார்ச் 23, 2024

“கூட்டணியை நம்பி எல்லாம் நாங்கள் கட்சி நடத்தவில்லை. கூட்டணி இல்லை என்றால் சொந்த பலத்தில் நிற்போம்.” - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“பிரதமரே, எங்கள் உணர்ச்சியை தொட்டுப் பார்க்காதீங்க. எங்கள் கட்சியை கைவேப்பன்னு சொல்லாதீங்க. ரத்தம் கொதிச்சுப் போயிடும்.” - திமுக அமைச்சர் துரைமுருகன்

“அண்ணாமலைக்கு சொந்த ஊர் கரூர். அவர் ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்?” - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“தேர்தலுக்காக கட்சிகளைப் பிடித்து வேட்பாளர் ஆனவன் நான் அல்ல. என் மக்களை காக்கவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.” - பாமக கடலூர் வேட்பாளர் தங்கர் பச்சான்

“வாக்குக்கு ஒரு ரூபாய் கூட தர மாட்டோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து எந்தப் பயனும் இல்லை. 2026-ல் ஆட்சியைப் பிடிக்கவே பாஜகவுடன் கூட்டணி” - பாமக தலைவர் அன்புமணி

“பாமக வேட்பாளர்களில் 30% மகளிர், 20% பட்டியலினத்தோர். இதுதான் சமூக நீதி” - பாமக நிறுவனர் ராமதாஸ்

“கோவை வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா..? தயார் எனில் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்” - கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

“டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது இண்டியா கூட்டணிக்கு சாதகமான தாக்கத்தை கொடுக்கும்” - விசிக தலைவர் திருமாவளவன்

“பாஜக ஆட்சியின் ஊழல்கள் அனைத்தும், இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் அம்பலமாகும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Web Stories

மேலும் படிக்க...