நட்டா ‘நக்கல்’ முதல் பிரேமலதா ஒப்பீடு வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 21, 2024

“இது வெறும் தேர்தல் களமல்ல... ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப் போர்க்களம்!" - முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின்

“காங்கிரஸ் நிதியை முடக்கி, மோடியும் அமித் ஷாவும் எங்கள் மீது கிரிமினல் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர்.” - காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி

“காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க, பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட முயற்சி நடக்கிறது” - காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

“பாமக சாதனைகளை தன்னுடையதாக கூறும் திமுகவுக்கும், ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

“காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமே” - பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

“பெட்ரோல், டீசல் விலையை திமுக குறைக்க முடியுமா? அல்லது, இண்டியா கூட்டணியா ஆட்சிக்கு வரப்போகிறது குறைப்பதற்கு?” - அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ்

“திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சிதான் இந்த 2024 மக்களவைத் தேர்தல்” - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

“பம்பரம் போல் காணாமல் போகாமல், இலை போல் இடையில் உதிராமல், முரசு போல் முரண்பாடு இல்லாமல், பழம் ஒன்று பூவோடு சேர்ந்து இருக்கிறது.” - பாஜக மாநில பொதுச் செயலர் ராம.சீனிவாசன்

“பாஜக எனும் சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்டவே திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்” - முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு தலைவர் கருணாஸ்

“எம்ஜிஆர், ஜெ., விஜயகாந்த் மூவரும் டிசம்பரில் மறைந்தவர்கள். சினிமா துறையை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆசியோடு அதிமுக கூட்டணி வெல்லும்” - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா

Web Stories

மேலும் படிக்க...