‘தொலைந்த தூக்கம்’ முதல் ‘5ஜி திமுக’ வரை - சேலத்தில் மோடி உதிர்த்த 10 தெறிப்புகள்

“தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கும், எனக்கும் கிடைத்து வரும் மிகப் பெரிய மக்கள் ஆதரவை, இந்திய நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.”

“தமிழகத்தில் மோடி ஆகிய எனக்கும் பாஜகவுக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது.”

“இந்து மதத்தின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே இண்டியா கூட்டணி.”

“காங். - திமுக கூட்டணி இந்து சக்தியின் வடிவத்தை, ஆன்மிகத்தை, சனாதனத்தை அழித்துவிடுவதாக கூறுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

“திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள்.”

“இண்டியா கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரஸும் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என்பதற்கு தமிழகம்தான் சாட்சி.”

“தமிழகத்தில் திமுக ‘5ஜி’ என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது, அவர்கள் செய்து வருவது, 5ஜி குடும்ப ஆட்சி மோசடி.”

“பிரதமராக வரவேண்டிய ஜி.கே.மூப்பனாருக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து, அவரை வளர விடாமல் செய்ததுதான் காங்கிரஸ் கட்சியின் குணம்.”

“எனது நாட்டின் தமிழ் மொழி உலகத்தில் தொன்மையான மொழி என்று நான் உலகம் முழுவதும் நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறேன்.”

“அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிற காலம் அது.”

Web Stories

மேலும் படிக்க...